திமுக அரசு.. மனசாட்சியும் கிடையாது.. மக்களைப் பற்றி கவலையும் கிடையாது.! டிடிவி தினகரன் கேள்வி.!! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 34 வது நினைவு தினம் நேற்று முன் தினம் அனுசரிக்கப்பட்டது. இன்றைய தினம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் சசிகலா, டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்த திட்டமிட்டிருந்தனர். 

அனால், எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காவல்துறை அனுமதி மறுத்தது.

இந்நிலையில், இது குறித்து தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். தனது ட்வீட்டர் பக்கத்தில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நாங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினால்  ஓமிக்ரான்  பரவும் என்று தடைபோட்ட ஸ்டாலினின் காவல்துறை, உதயநிதி ஸ்டாலினுக்காக  கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா?

ஒருவேளை தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் மட்டும்தான் ஓமிக்ரான்  பரவும் என்று  தி.மு.க அரசுக்கு உலகமகா நிபுணர்கள் யாராவது  சொல்லி இருப்பார்களோ? இவர்களுக்கு மனசாட்சியும் கிடையாது ; மக்களைப் பற்றி கவலையும்  கிடையாது! 'தீய சக்தி கூட்டம்' என்று தெரியாமலா சொன்னார்கள் நம் தலைவர்கள்?! என கேள்வி எழுப்பி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ttv dinakaran question for tn govt


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->