டிடிவி தினகரன் மகள் திருமணம் தள்ளிவைப்பு.. காரணம் இதுதானா.?
ttv dinakaran daughter marriage postponed
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகள் ஜெயஹரணிக்கும், காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகன் இராமநாதனும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. இவர்களது திருமணம் சசிகலா தலைமையில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஜூலை 13-ஆம் தேதி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

டிடிவி தினகரன் மகள் திருமணத்திற்கு உறவினர்கள் மட்டுமின்றி முக்கிய விஐபிக்கள் ஏராளமானோரை அழைத்திருந்தார். திருமணத்திற்கு அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து தங்களுக்கு இன்னும் அதிமுகவின் செல்வாக்கு இருக்கிறது என காட்டுவதற்காக டிடிவி தினகரன் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஊரடங்கு காலகட்டம் என்பதால் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் 10 பேர் மட்டுமே திருமணத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். சசிகலா உள்ளிட்ட விஐபிக்கள் பங்கேற்க முடியாது என்பதால் ஜூன் 13ஆம் தேதி நடைபெற இருந்த திருமணத்தை தினகரன் ஒத்திவைத்துள்ளார்.

மேலும் கல்வித் தந்தை என டெல்டா மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட பூண்டி துளசி அய்யா வாண்டையாரின் பேரன் தான் ராமநாதன். சமீபத்தில் பூண்டி துளசி அய்யா வாண்டையார் மறைந்த நிலையில், திருமணம் தள்ளிப் போனதற்கு இதுவும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.
English Summary
ttv dinakaran daughter marriage postponed