#BigBreaking || அய்யா மன்னிச்சுக்குங்க., உச்சநீதிமன்றத்தில் கதறிய 'தமிழக அரசு' அதிகாரிகள்.! பரபரப்பு வழக்கு.! - Seithipunal
Seithipunal


நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பு தொடர்பான வழக்கு ஒன்றில் தமிழக அரசு அதிகாரிகளின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்று கொணட உச்சநீதிமன்றம், அரசு உயரதிகாரிகள் இனி இதுபோன்ற நீதிமன்ற அவமதிப்பை செய்யக்கூடாது என்று கூறி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு அதிகாரிகளின் பணி உயர்வு என்பது இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு உள்ளிட்டவைகளை கொண்டு தமிழக அரசு சுயபடுத்திவந்த நிலையில், இதனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

மேலும், தமிழக அரசு அதிகாரிகளின் பணி உயர்வு என்பது டிஎன்பிஎஸ்சி தேர்வில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் தான் நடைபெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் இந்த உத்தரவை தமிழக அரசும், அதிகாரிகளும் கடைபிடிக்கவில்லை என்று கோரி பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அதிகாரிகள் நடந்து கொண்டது உறுதியானது. இதனை அடுத்து அந்த அதிகாரிகள் மீது தண்டனை வழங்கக்கூடிய தீர்ப்பு இன்று வழங்கப்பட இருந்தது.

இந்நிலையில், அப்போதைய தலைமைச் செயலாளர், டிஎன்பிஎஸ்சி செயலர் உள்ளிட்ட 9 உயர் அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டனர்.

இதனை அடுத்து, தமிழக அரசு அதிகாரிகளின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்று கொணட உச்சநீதிமன்றம், அரசு உயரதிகாரிகள் இனி இதுபோன்ற நீதிமன்ற அவமதிப்பை செய்யக்கூடாது என்று கூறி, வழக்கை முடித்து வைத்து உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt Staffs Apology to Supreme Court


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->