ஒரு பேனருக்கு 611 ரூபாய் தான் செலவு - எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக அரசு விளக்கம்! - Seithipunal
Seithipunal


"நம்ம ஊரு சூப்பரு இயக்கம்" செயல்படுத்த விழிப்புணர்வு பதாகைகள் நிறுவியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் "நம்மஊருசூப்பருஇயக்கம்" குறித்த விழிப்புணர்வு பதாகைகள் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டதாக உண்மைக்கு மாறான தகவல்கள் இன்று செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் காணப்பட்டது. இந்த தவறான தகவல் குறித்த விளக்கம் பின்வருமாறு;

ஊரக பகுதிகளில், ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 2 வரை 'நம்ம ஊரு சூப்பரு' என்ற "சிறப்பு மக்கள் இயக்கம்" அனைத்து கிராம ஊராட்சிகளிலும் துவங்கப்பட்டது. ஆகஸ்ட் இந்த 15 கிராம இயக்கமானது சபை கூட்டத்தின்போது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் மேலாண்மை மற்றும் நெகிழிகழிவு மேலாண்மை, ஆகியவற்றை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி கிராமப்புற மக்களிடையே மன மாற்றத்தை ஏற்படுத்திட முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில் தொடங்கப்பட்டது. 

நம்ம ஊரு சூப்பரு இயக்கம், ஒன்றிய அரசின் "தூய்மையே சேவை" இயக்கத்தோடு இணைந்து செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2வரை அனைத்து ஊராட்சிகளிலும் நடத்தப்பட்டது.

நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் மூலம் குப்பைகள் அதிகம் உள்ள 47399 இடங்கள் கண்டறியப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன. அதுமட்டுமன்றி 47,949 நீர் நிலைகள். முக்கியத்துவம் தரப்பட்டு 4.36 இலட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

இயக்கத்தின் செலவினங்கள் ஒன்றிய அனுமதித்துள்ள வரையறுக்கப்பட்ட நிதியில் நம்ம ஊரு சூப்பரு நிதிக்குழு மானியம் இரண்டு சதவீதம் நிர்வாக செலவின தொகுப்பிலிருந்தோ அல்லது பொது நிதியிலிருந்தோ மேற்கொள்ள ஆணையர். ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

அச்சடிக்கும் பதாகைகள் ஊராட்சிகளின் வாயிலாக அப்பகுதியிலுள்ள ஒன்பது அச்சகங்களின் மூலம் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விளம்பர பதாகைகள் நிறுவியது குறித்து மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட விவரங்களின்படி பணியில் எந்தவொரு தனியொரு நிறுவனமும் ஈடுபடுத்தபடவில்லை. மாநிலம் முழுவதும் உள்ள 89 நிறுவனங்கள் மூலம் 27 மாவட்டங்களில் இந்த விளம்பர மாவட்டங்களில் மொத்தம் 84,653 எண்ணிக்கையிலான விளம்பரப் பதாகைகள் பல்வேறு அளவுகளில் (அதாவது 6x4, 12x8, 10x8 அடி) அச்சடிக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்பது உண்மைக்குபுறம்பான தகவல் ஆகும். இவற்றிற்கான சராசரி மதிப்பீடாக பேனர் ஒன்றிற்கு சுமார் 611 ரூபாய் (சரக்கு மற்றும் சேவைக்கட்டணம் உட்பட) செலவிடப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு பதாகைகள் நிறுவிட, புகாரில் பேனர் ஒன்றுக்கு ரூபாய் 7,906 தெரிவிக்கப்பட்டுள்ளது முற்றிலும் தவறானதாகும். 

செலவிடப்பட்டுள்ளதாக "நம்மஊருசூப்பரு" இயக்கத்தின் ஊராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைபணிகள் மூலம் ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட கள ஆய்வுகளின் அடிப்படையில் தமிழகத்தின் கிராமப்புர சுகாதாரம் சிறப்பாக உள்ளது என Swachh Survekshan Grameen- 2022 கணக்கெடுப்பின்படி அங்கீகரிக்கப்பட்டு தேசிய அளவில் தமிழகம் "மூன்றாம் இடம்" பெற்று மாண்புமிகு குடியரசுத்தலைவர் அவர்களால் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது என்பது சுட்டிக்காட்டப்படுகிறது" என்று தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt Reply To ADMK EPS 24112022


கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வைAdvertisement

கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வை
Seithipunal