பாஜக ஒரு மதத்திற்கு சொந்தமான கட்சி இல்லை..!! அண்ணாமலை விளக்கம்..!!
TNBJP president annamalai explained BJP is not a religious party
சென்னையில் தமிழக பாஜக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் "சமத்துவ கிறிஸ்மஸ் விழாவை பாஜக முதன்முறையாக நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பாஜகவில் உள்ள அனைத்து மதங்களையும் சார்ந்த சான்றோர்களும் பெரியோர்களும் ஒரே மேடையில் இணைந்துள்ளோம்.

அவரவர் மதத்தையும் பாரம்பரியத்தையும் பேணி காத்து பின்பற்றுவதே மதச்சார்பன்மை. இந்தியாவில் அவசர நிலை காலத்தில் தான் மதச்சார்பின்மை என்ற வார்த்தை புதிதாக கொண்டுவரப்பட்டது. எந்த மதத்தையும் யார் மீதும் திணிக்க மாட்டோம். பாஜகவில் எல்லா மதத்தில் இருந்தும் தலைவர்கள் வருவார்கள்.

பாஜக என்பது ஒரு மதத்திற்கு மட்டும் சொந்தமான கட்சி இல்லை. அதை மக்கள் புரிந்து கொள்ள சற்று காலமாகும். அதுவரை பாஜக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இந்தியாவில் ஒரு மாநிலத்தில் சிறுபான்மையினராக இருப்பவர்கள் மற்றொரு மாநிலத்தில் பெரும்பான்மையாக இருப்பார்கள். எனவே சிறுபான்மை பெரும்பான்மை என்பதை தாண்டி இந்தியர் என்ற ஒற்றுமை இருக்க வேண்டும். இது போன்ற போலிய அரசியலை உடைக்கவே பாஜக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது" என அண்ணாமலை பேசியுள்ளார்.
English Summary
TNBJP president annamalai explained BJP is not a religious party