நாளை முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு.! காவல்துறையினருக்கு டிஜிபி வழங்கிய திரிபாதி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. 

அதன்படி, நாளை முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. மே மாதம் 10 ஆம் தேதி முதல் மே மாதம் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த முழு ஊரடங்கில் உணவகத்தில் பார்சல் சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என்றும், சாலையோர உணவகம் திறக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டும் செயல்படலாம். அனைத்து தனியார் அலுவலகமும், நிறுவனங்களும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுபான கடைகள் இயங்க அனுமதி கிடையாது. அத்தியாவசிய துறைகளை தவிர்த்து மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது. 

காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். தேநீர் கடைகள் 12 மணிவரை பார்சல் சேவைகள் கொண்டு இயங்கலாம். நியாயவிலைக்கடைகள் காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை மட்டுமே செயல்படும். 

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குக்கு மக்கள் கட்டாயம் ஆதரவு தர வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் மட்டுமே கொரோனா வைரஸை ஒழிக்க இயலும். சுற்றுலா தங்களுக்குக் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில்கள் மற்றும் மத வழிபாட்டு தங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் அமலாகும் முழு ஊரடங்கின்போது இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட் செயல்பட அனுமதி கிடையாது.

முழுஊரடங்கு நாளைமுதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று,  காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி அறிவுரை வழங்கியுள்ளார்.

மேலும், எந்த சூழ்நிலையிலும் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ 
நடந்துகொள்ளக்கூடாது என்றும் காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி அறிவுரை வழங்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn police commissioner request to tn police for lock down


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->