துரைமுருகன் வீட்டில் ரைடு.! சிக்கியதா 2000 கோடி.?! பீதியை கிளப்பும் பரபரப்பு தகவல்.!! - Seithipunal
Seithipunal


வரும் பாராளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக சார்பில், திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் நிலையில் துரைமுருகன் வீட்டில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்படுவதற்காக, பணம், பரிசுப்பொருட்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் படி, வேலூர், காட்பாடி அருகே காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு திடீரென சோதனையிட்டனர்.

அப்போது, துரைமுருகனுக்கு நெஞ்சு வலி பிரச்சனை உள்ளதால் இந்த நேரத்தில் சோதனை செய்ய வேண்டாம்.  நீங்கள் காலையில் சோதனையைத் தொடங்குங்கள் என்று துரைமுருகன் தரப்பில் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதிகாரிகள் அவர்கள் கூறியதை ஏற்கவில்லை. சோதனையிடும் நோக்கில் துரைமுருகனின் வீட்டு வாயிலில் அதிகாரிகள் உள்ளனர். அதிகாரிகளுடன் திமுக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல் துயிரையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான பள்ளி, கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துரைமுருகன் வீட்டில், 7 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்தினர். துரைமுருகனுக்கு சொந்தமான பள்ளியில் 3 அதிகாரிகளும், கல்லூரியில் 4 அதிகாரிகளும் சோதனை நடத்தினர். அதனை தொடர்ந்து, துரைமுருகன் வீட்டில் நேற்று காலை 8.30 மணியளவில் சோதனை நிறைவுப் பெற்றதாக தகவல்கள் வெளியானது.

வருமானவரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை குறித்து துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார். சோதனை மூலம் மிரட்டும் வேலை எங்களிடம் நடக்காது, நாங்கள் அதற்கு பயப்பட மாட்டோம் என்று கூறியுள்ளார்.  

இந்நிலையில், மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சியான பாமகவின் வேட்பாளர் சாம் பாலை ஆதரித்து அமைச்சர் ஜெயக்குமார் பிரச்சாரம் மேற்கொண்ட போது செய்தியாளர்கள் அளித்த பேட்டியில், ''ப்ளூ ஸ்கை ஆபரேஷன் என்ற பெயரில், திமுக போட்டியிட்டும் ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ100 கோடி விதம் செலவு செய்ய திட்டமிட்டுள்ளனர். 20 தொகுதிக்கு மொத்தம் ரூ.2000 கோடி செலவு செய்து மக்களை விலைக்கு வாங்க திட்டமிட்டனர். இது தொடர்பாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்ததை வைத்தே துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெற்று இருக்கலாம்'' என்று பரபரப்பாக  பேட்டியளித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN MINISTER JEYAKUMAR OPEN TALK ABOUT IT RAID


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->