தமிழகத்தின் 14 மாவட்டங்கள்., அமைச்சர்களுக்கு முக ஸ்டாலின் போட்ட உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினமும் அதிகரித்து கொண்டு வந்த கொரோனா பரவலின் காரணமாக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். அரசும் சோதனைகளை அதிகப்படுத்தி கொண்டே வந்தது. பல தடுப்பு நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டது. 

இதனை மக்கள் முறையாக கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததால் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்தது. ஆனால், தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தின் 14 மாவட்டங்களுக்கு நோய் தடுப்பு பொறுப்பாளர்களாக  14 அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை மாவட்டத்துக்கு அமைச்சர்கள் மா சுப்பிரமணியம் மற்றும் சேகர்பாபு நியமிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைச்சர் அன்பரசன் நியமிக்கப்பட்டுள்ளார்.  கோவை -  அர.சக்கரபாணி, கா.ராமச்சந்திரன், சேலம் -  செந்தில் பாலாஜி, திருவள்ளூர் -  சா.மு.நாசர், மதுரை -  பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், ஈரோடு -  முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளனர் .
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn minister for corona control issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->