நகை கடன் தள்ளுபடி.. புதிய நிபந்தனைகள்.. இவர்களுக்கு மட்டும் தான் தள்ளுபடியா.?
tn gold loan issue
தமிழகம் முழுவதும் நகை கடன் தள்ளுபடி திட்டத்துக்காக கூட்டுறவு வங்கி நகை கடன்தாரர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்து இருந்தது.
திமுக ஆட்சி அமைந்து 100 நாட்களை கடந்த நிலையில், தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. அதன்படி, நகை கடன் தள்ளுபடி செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் அரசின் நிதிநிலைமை கருத்தில் பல்லேறு நிபந்தனைகளை விதித்து கடன் தள்ளுபடி பெறுவோரின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றவர்கள் இருசக்கர வாகனம், கார் வைத்திருக்கிறார்களா என கணக்கிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உண்மை நிலையை அறிய வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் சரிபார்க்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே வழங்கப்பட்ட கடன் தள்ளுபடியில் பலன் அடைந்தவரா .? அரசு ஊழியரா.? கூட்டுறவு சங்க ஊழியரா.? அரசு ஊழியர்களின் உறவினரை.? அவரது குடும்பத்தின் வேறு நபர்கள் கடன் பெற்றுள்ளார்களா.? சிறு, குறு, பெரு விவசாயியா? எவ்வளவு கடன் பெற்றுள்ளனர் என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்பட்டு தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படுகிறது.
இந்த விவரம் முழுமையாக சேகரிக்கப்பட்ட பிறகு கூட்டுறவுக் கடன் தள்ளுபடி அளிக்க நிபந்தனைகள் அறிவிக்கப்படும். அரசு ஊழியர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், இருசக்கர வாகனம், கார் வைத்திருப்பவர்கள், ஏற்கனவே கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி வழங்கப்படாது என அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.