#BREAKING || கோவை பேரூர் பேரூராட்சியை கைப்பற்றியது திமுக.!  - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம், பேரூர் பேரூராட்சி திமுக தற்போது கைப்பற்றியுள்ளது. பேரூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், திமுக 13 இடங்களும், அதிமுக இரண்டு இடங்களையும் கைப்பற்றி உள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 15 வார்டுகளில், திமுக வேட்பாளர்கள் 11 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக மூன்று இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர்கள் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். 

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியில் மொத்தம் உள்ள 24 வார்டுகளில், 21 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக வேட்பாளர் ஒரு வார்டில் மட்டும் வெற்றி பெற்றுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகராட்சியை திமுக தற்போது கைப்பற்றியுள்ளது. திருச்செந்தூர் நகராட்சியில் மொத்தம் உள்ள இருபத்தி ஏழு இடங்களில், 17 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் திருச்செந்தூர் நகராட்சியை திமுக தற்போது கைப்பற்றியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பேரூராட்சி திமுக தற்போது கைப்பற்றி உள்ளது. மொத்தமுள்ள 15 இடங்களில், 12 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளனர். மீதமுள்ள 3 வார்டுகளில் காங்கிரஸ், பாஜக, அதிமுகவை சேர்ந்த வேட்பாளர்கள் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

மேலும், திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பேரூராட்சியையும் திமுக கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 15 இடங்களில், பத்து இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மீதமுள்ள 5 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் 4 பேரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர். 

நெல்லை சங்கர் நகர் பேரூராட்சி திமுக வசமாகியுள்ளது. சங்கர் நகர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 12 வார்டுகளில் திமுக -11 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதிமுக ஒரு இடத்தில கூட வெற்றிபெறவில்லை. அதே சமயத்தில் அமமுக - 1 வார்டில் வெற்றிபெற்று வசதியுள்ளது. 

முன்னதாக, ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சியில் மொத்த அரசியல் கட்சியையும் வாஷ்-அவுட் செய்து, மொத்தமுள்ள 15 இடங்களிலும் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN ELECTION RESULT KOVAI PERUR


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->