தமிழக ஆளுநருக்கு.,  கே.எஸ்.அழகிரி அவசர வேண்டுகோள்! - Seithipunal
Seithipunal


மருத்துவப் படிப்பில் தமிழக அரசு பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்ட மசோதாவுக்கு, தமிழக ஆளுநா் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவா் சோக்கையில் அரசு பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு கடந்த ஒரு மாத காலமாக ஆளுநா் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த மசோதா கடந்த சட்டப்பேரவையில் செப்டம்பா் 15 -இல் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்த ள் ஒதுக்கீட்டை நடப்பாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் கோரி வருகின்றன. ஆனால் ஆளுநா் இது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறாா்.

இந்த சட்ட மசோதா குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு மாத கால அவகாசம் போதாதா என்று குறிப்பிட்டு ஏழை, ஏளிய கிராமப்புற மாணவா்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பே கிடையாதா? என்று கூறி நீதிபதி கிருபாகரன் கண்கலங்கியது அனைவரையும் அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனவே, தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவுக்கு தமிழக ஆளுநா் உடனடியாக ஒப்புதல் வழங்கவேண்டும்." என்று  கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tn congress head request to tn governor


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->