#சற்றுமுன்: தமிழக முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! மகிழ்ச்சியின் பெண்கள்! - Seithipunal
Seithipunal


மூன்று நாள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் நேற்று இரண்டாவது நாள் கூட்டத்தொடரில் நீட் தேர்வு உள்ளிட்ட முக்கிய விவரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பின. எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின், "திமுக என்றும் நீட் விவகாரத்தில் எதிராகத்தான் உள்ளது. கலைஞர் ஆட்சியின் போது நீட்தேர்வு நடைபெறவில்லை. நீட் தேர்வு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும்" என்று மு க ஸ்டாலின் பேசியுள்ளார்.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் சபாநாயகர் முன்பு நீட் தேர்வுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டு, அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் சிறிது நேரம் சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், மூன்று நாள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று இறுதி நாள் கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை 110 விதியின் கீழ் அறிவித்து வருகிறார், அதில், வரதட்சணை கொடுமைக்கு அதிகபட்ச தண்டனையாக 7 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டு இருந்ததை, 10 வருடங்களாக உயர்த்தி தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM ANNOUNCEMENT SEP 16


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->