#BigBreaking: சென்னைக்கு சிறப்பு திட்டம் ரூ.3,140 கோடியில்., இடைக்கால பட்ஜெட் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனை தமிழக சட்டப்பேரவையில் 11வது முறையாக  நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார்.

சற்றுமுன் தொடங்கிய சட்டப்பேரவையில், இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றிவருகிறார். அதில், 

* இடைக்கால பட்ஜெட் 2021-  தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு

* வீட்டு வசதி துறைக்கு நிதியுதவியாக உலக வங்கியிடம் இருந்து, 1,492 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. 

* நீர்வள ஆதார திட்டங்களுக்கு ரூ.6,453 கோடி நிதி ஒதுக்கீடு. 

* நிர்ணயித்த இலக்கிற்கு முன்னதாகவே, சாலை மேம்பாட்டு பணிகள் நிறைவு

* சாலை மேம்பாட்டு திட்டத்தின் 2ஆம் கட்ட பணி ரூ.5,171 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

* பெட்ரோல், டீசல் மீதான செஸ் taxயை குறைக்க மத்திய கோரிக்கை.

* சென்னை-குமரி தொழில் வழித்தட திட்டம் ரூ.6,448 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

* சென்னை மாநகராட்சிக்காக தனித்தன்மை வாய்ந்த வளர்ச்சி திட்டங்கள் வடிவமைப்பு. சிறப்பு திட்டம் ரூ.3,140 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

* 3,016 கோடி செலவில் 40 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படும்.

* ரூ.144.33 கோடி நிதியில் 2,749 சமூக சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

* பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மேற்கூரை அமைப்பதற்கான மானியம் ரூ.70,000 ஆக உயர்வு.

* மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.1374 கோடி ஒதுக்கீடு 

* கல்லணை கால்வாய் புனரமைப்பு, நவீனப்படுத்தும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்

* சரபங்கா நீரேற்று திட்டம், அத்திகடவு-அவினாசி திட்டம் விரைவில் நிறைவுபெறும்

* திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் 12.50 லட்சம் பேருக்கு ரூ.1,791 கோடியில் தங்கம் வழங்கப்பட்டுள்ளது. திருமண உதவித் திட்டத்தில் ரூ.4,371 கோடி நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN BUDGET 2021 chennai Scheme


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->