இந்து சமய அறநிலைத்துறை கண்டித்து பாஜக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம்...!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து தமிழக பாஜகவின் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் நாச்சியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் "திமுக அரசு மத நம்பிக்கையையும் இறை நம்பிக்கையும் இல்லாமல் கோவில்களின் மரபு சார்ந்த விஷயங்களில் தலையிட்டு தொடர்ந்து அத்துமீறல் செய்து வருகிறது. 

தமிழ் மக்களின் ஆன்மீக உணர்வுகளை தமிழக அரசு புண்படுத்தி வருகிறது. எனவே திமுக அரசை கண்டித்தும் இந்து சமய அறநிலை துறையில் அரங்கேரி வரும் அவலங்களை வெளிப்படுத்தும் வகையில் சென்னையில் இன்று (ஜன.21) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. 

சென்னை அடுத்த வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குவார். இந்து சமய அறநிலை துறை மற்றும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மக்களுக்காக நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அனைவரும் பங்கெடுத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN BJP conduct fasting protest today against TNHRCE


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->