அதிமுக பொதுக்குழு.. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஓ பன்னீர்செல்வம் தரப்பு இரட்டைத் தலைமை தொடர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிப்பதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்துவருகின்றனர். 

கடந்த கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொது செயலாளர் நியமிப்பதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் உத்தரவால் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. ஆகையால், 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர். 

கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தை அவமதிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு நடந்து கொண்டனர். ஓபிஎஸ் மேடையில் அமர்ந்திருக்கும் போது அவருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி ஆதரவான பொதுக்குழு உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, ஓ பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டது. 

பொதுக்குழு ஒரு தலைப்பட்சமாக நடைபெறுவதாக கூறி ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் பொதுக்கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, ஓ.பி. எஸ் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்.

இதனுடைய சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமென ஓபிஎஸ் ஆதரவாளர் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை சேர்ந்த நீதிமன்றம் வருகின்ற 11ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொது குழு கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாதென உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், வருகின்ற 11ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் கொரோனா விதிமுறைகளை மீறினால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் எச்சரிக்கை எடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tiruvallur collector warning for admk general committee meet for corona


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->