முதல்வர் விஜய்யின் 'பட்டு வேட்டி' சென்டிமென்ட் ரகசியம் இதுதான்...! அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்...!
This secret of Chief Minister Vijay Pattu Dheeti sentiment Minister Sengottaiyan explains
தமிழக முதலமைச்சர் விஜய் கோட்-சூட், வெள்ளைச் சட்டை, பட்டு வேட்டி என வெவ்வேறு உடைகளில் தோன்றுவது குறித்த கேள்விகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பேற்றது.

இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்-அமைச்சராகப் பதவியேற்றார். பதவியேற்பு நிகழ்ச்சியின்போது அவர் கோட்-சூட் அணிந்து வந்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.தமிழக அரசியலில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் வெள்ளை நிற வேட்டி, சட்டை அணிந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்தச் சூழலில், விஜய்யின் மாறுபட்ட உடைத்தேர்வு பலரது கவனத்தையும் ஈர்த்தது.பின்னர் அவர் வெள்ளைச் சட்டை அணிந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார். சில நேரங்களில் பட்டு வேட்டி, சட்டையிலும் தோன்றினார். அண்மையில் பிரதமர் மோடியைச் சந்தித்தபோது, அடர் கருநீல நிறச் சட்டை மற்றும் அதற்குப் பொருத்தமான கால்சட்டை அணிந்து வந்தது மீண்டும் விவாதத்தைக் கிளப்பியது.
பிரதமர் மோடி பங்கேற்ற சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் விஜய் அடர் கருநீல நிற உடையிலேயே காணப்பட்டார். அவரது இந்த உடைத்தேர்வு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கருத்துகளை எழுப்பியது.
இதற்கிடையே, ஐ.ஐ.டி. நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் சிலர், தங்களது தலைவரின் உடைத்தேர்வு அவரது அரசியல் நிலைப்பாட்டையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் அடையாளமாக அமைந்துள்ளதாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில், முதல்-அமைச்சர் விஜய்யின் உடைத்தேர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.
அப்போது அவர், “முதல்-அமைச்சர் விஜய் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே பட்டு வேட்டி, சட்டை அணிந்து வருவார். மற்ற நாட்களில் வழக்கமான உடையில்தான் வருவார்” என்று விளக்கமளித்தார்.
English Summary
This secret of Chief Minister Vijay Pattu Dheeti sentiment Minister Sengottaiyan explains