திருவள்ளுவர் தினம் : சிறப்பான ஒரு காணொளியை வெளியிட்ட பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலகமே பின்பற்றும் நிலையில், அதனை இயற்றிய திருவள்ளுவரை போற்றும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளை முன்னிட்டு, திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தும் அரசியல்கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களையும், அவரின் கருதுங்களையும் மக்களுக்கு எடுத்துரைப்பார்கள். 

இந்நிலையில், இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அவரது சமூகவலைத்தள பக்கத்தில் திருவள்ளுவர் குறித்து தமிழில் பதிவிட்டுள்ளார். 

அவரின் அந்த பதிவில், "திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. 

பன்முகத்தன்மை & அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன்." என்று பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruvalluvar day pm modi wish


கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,
Seithipunal