பாஜ சராசரியான அரசியல் கட்சி இல்லை, திமுகவுடன் வெறும் இரண்டு சீட்டுக்காக நாங்கள் இருக்கவில்லை: திருமாவளவன் பேச்சு..!
Thirumavalavan says we are not with DMK for just two seats
திமுகவுடன் வெறும் இரண்டு சீட்டுக்காக நாங்கள் இருக்கவில்லை என்றும், அந்த இரண்டு சீட்டை கூட பெற முடியாதவர்கள் இருக்கின்றதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்று அவர் பேசும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அங்கு திருமாவளவன் பேசும் போது கூறியதாவது:
நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என நினைத்த விடுதலைப் போராட்ட வீரர்கள் யாருமே, ஜாதி என்ற சமூக கூறு குறித்து சிந்திக்கவில்லை என்றும், தற்போது, இந்தியாவில் எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும், எதைத் தொட்டாலும், ஜாதியை அளவுகோலாக எடுத்துக் கொள்கின்றனர் என்றும், நாங்கள், பிராமணர்களை வெறுப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெறும், இரண்டு சீட்டுக்காக திமுகவுடன் இருக்கிறேன்' என, என்னை விமர்சனம் செய்கின்றனர். ஆனால், அந்த இரண்டு சீட்டை கூட சிலரால் வாங்க முடியவில்லை என்று கூறியுள்ளார். மேலும், பாஜ சராசரியான அரசியல் கட்சி இல்லை என்றும், அவர்களால் ஏற்படும் கருத்தியல் பின்னடைவை சரிசெய்ய, 50 ஆண்டுகள் ஆகும் என்றும் பேசியுள்ளார்.
அந்த அளவுக்கு, கடந்த 10 ஆண்டுகளில் கருத்தியல் பின்னடைவையும், ஆதிக்க வெறியையும் பாஜ ஊட்டியுள்ளது தாகவும், ஈவெராவையும், திமுகவையும் எதிர்க்கிறோம் என்ற பெயரில் திராவிட அரசியலை எதிர்க்கின்றனர் என்று திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Thirumavalavan says we are not with DMK for just two seats