தன்னிச்சையாக முடிவெடுப்பது ஏற்புடையது அல்ல.!! - நிர்மலா சீதாராமனுக்கு திருமாவளவன் அட்வைஸ்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு நேற்று வருகை புரிந்த அவர் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டதோடு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது தமிழக அரசு சார்பில் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணத் தொகை வழங்குவது குறித்தான ஆவணங்கள் மற்றும் கோரிக்கை மனுவை தமிழக அமைச்சர்கள் அவரிடம் வழங்கினர். இந்த நிலையில் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஆலோசிக்காமல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னிச்சையாக முடிவெடுப்பது ஏற்புடையது அல்ல என தெரிவித்துள்ளார்

மேலும் பேசிய அவர் தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பதில் பொறுப்பற்றது. பிரதமரிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவிப்பது ஏற்புடையது அல்ல. நிர்மலா சீதாராமன் பிரதமரின் ஒப்புதலோடு பேசுகிறாரா? அல்லது தான்தோன்றித்தனமாக பேசுகிறாரா? அல்லது கொள்கை முடிவாக இதை பேசுகிறார்களா..? எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirumavalavan Advice to Nirmala Sitharaman


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->