நெஞ்சுவலி., துணை தலைவர் பதவி., தேனி பெரியகுளத்தில் திமுக கவுன்சிலர் செய்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி துணை மன்றத் தலைவருக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற, திமுக கவுன்சிலர் ராஜா முகமது, நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெரியகுளம் நகர்மன்றத் துணைத் தலைவர் பதவியானது, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

ஆனால் நடைபெற்ற மறைமுக தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளல் களமிறக்கப்படாமல்,  26 வார்டு திமுக கவுன்சிலர் ராஜாமுகமது போட்டியின்றி ஒருமனதாக வெற்றி பெற்றார்.

இதற்கிடையே, திமுகவின் தலைமையை தலைமை உத்தரவை மீறி கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜா முகமது தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தேனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ராஜா முகமது நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜாமுகமது, விசிக தோல்வியை சந்தித்ததால், தனது துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்று பிடிவாதமாக மறுத்து உள்ளார்.

திரைப்படங்களில் ஆபத்து என்றல் அரியல்வாதிக்கு நெஞ்சுவலி வந்துவிடும்., அதுபோல இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

theni periyakulam dmk raja muhammad heart attack


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->