தேனி மாவட்டம்: 4 தொகுதிகளில் மீண்டும் உதயசூரியன் உதிக்குமா? பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! - Seithipunal
Seithipunal


சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள போடி, கம்பம், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகிய 4 தொகுதிகளிலும் அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்த மாவட்டத்தில் மீண்டும் திமுக கூட்டணிக்கு சாதகமான சூழல் உருவாகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 3 தொகுதிகளை திமுக கைப்பற்றியது. இம்முறை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் இணைந்திருப்பதால், அவரது சொந்த செல்வாக்கு உள்ள போடி தொகுதியையும் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் திமுக செயல்பட்டு வருகிறது.

கம்பம் தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ ராமகிருஷ்ணன் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். அதேபோல் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் சீட் கேட்டு வருகின்றனர்.
அதிமுகவில் முன்னாள் எம்எல்ஏ ஜக்கையன் போட்டியிட முயற்சி செய்து வருகிறார்.

இந்த தொகுதியில் முக்குலத்தோர், ஒக்கலிக்க கவுண்டர், நாயுடு மற்றும் சிறுபான்மை வாக்காளர்கள் கணிசமாக இருப்பதால் திமுகக்கு ஆதரவான நிலை உள்ளது என கூறப்படுகிறது.

அதிமுகவின் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட தொகுதியாக ஆண்டிப்பட்டி கருதப்படுகிறது.
இங்கு திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ மகராஜன் மீண்டும் களம் காண வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மற்றொரு புறம் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், தங்க தமிழ்ச்செல்வன் மகன் நிஷாந்த் ஆகியோரும் போட்டிக்கான ரேஸில் உள்ளனர்.

அதிமுகவில் லோகிராஜன், முருக்கோடை ராமர் உள்ளிட்டோர் சீட் கேட்டு வருகின்றனர்.
தேமுதிக வாக்குகள் இங்கு தாக்கம் செலுத்தக்கூடியதாக இருப்பதால், இந்த தொகுதியிலும் திமுகக்கு சாதகமான சூழல் உள்ளது என கூறப்படுகிறது.

தனித் தொகுதியான பெரியகுளம் மிகவும் சுவாரஸ்யமான போட்டியை எதிர்நோக்குகிறது.திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ சரவணகுமார் மீண்டும் சீட் எதிர்பார்க்கிறார். அவருடன் கீதா மற்றும் பாண்டியராஜன் ஆகியோரும் போட்டியில் உள்ளனர்.அதிமுக தரப்பில் தவமணி, ஜெயராமன் உள்ளிட்டோர் சீட் கேட்டு வருகின்றனர்.

இந்த தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) மற்றும் நாம் தமிழர் கட்சி பிரிக்கும் வாக்குகள் முடிவை தீர்மானிக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

போடி தொகுதியில் முக்குலத்தோர் மற்றும் தலித் சமுதாய வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
இந்த தொகுதியில் திமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வத்திற்கே வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
அதிமுகவில் நாராயணசாமி, தீபன் சக்கரவர்த்தி ஆகியோர் சீட் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் பாஜகவும் இந்த தொகுதியை கேட்கும் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய அரசியல் கணிப்புகளின்படி, கம்பம், ஆண்டிப்பட்டி, போடி ஆகிய தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு முன்னிலை இருப்பதாக கூறப்படுகிறது.ஆனால் பெரியகுளம் தொகுதியில் மட்டும் தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி பிரிக்கும் வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

இதனால், தேனி மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் இந்த முறை உதயசூரியன் மீண்டும் உதிக்கும் வாய்ப்பு உள்ளது என்ற கருத்தும் அரசியல் அரங்கில் பேசப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Theni District Will the sun rise again in 4 constituencies Periyakulam result is in Vijay hands


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->