மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ள தவெக..!
The TVK has allotted a Rajya Sabha seat to the Congress party
நாடு முழுவதும் மாநிலங்களவை எம்.பி.க்கள் 24 பேரின் 06 ஆண்டு பதவிக் காலம் 2026 ஜூன், ஜூலையில் முடிவடைகிறது. இதனையடுத்து, அந்த இடங்களுக்கான தேர்தல் ஜூன் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
இதில், தமிழகத்தில் அதிமுக சி.வி.சண்முகம் உட்பட 03 பேர் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். குறித்த 03 இடங்களுக்கு அதே நாளில் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சி.வி.சண்முகம் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து அவர் தனது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில், வரும் ஜூன் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக முதல்வரர் விஜய் அறிவித்துள்ளார்.
இது குறித்து தவெக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது;
''இம்மாதம் 18-ஆம் தேதி தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
The TVK has allotted a Rajya Sabha seat to the Congress party