மாநிலங்களவை தேர்தல்: யாருக்கு கொடுக்குறது...? திமுக - அதிமுகவுக்கு புதிய தலைவலி!
The Rajya Sabha Riddle DMK and AIADMKs Alliance Headache
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், 234 தொகுதிகளைப் பங்கிடுவதை விட, காலியாகும் 6 மாநிலங்களவை (Rajya Sabha) இடங்களை யாருக்குப் பங்கிடுவது என்பதுதான் தற்போது திமுக மற்றும் அதிமுக-விற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. கூட்டணிக் கட்சிகள் 'சட்டமன்றத் தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா சீட்' என்ற நிபந்தனையுடன் வருவதே இந்தத் திணறலுக்குக் காரணம்.
ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் பதவிக்காலம் முடிவடையும் 6 இடங்களில், தற்போதைய நிலவரப்படி திமுக-விற்கு 4 இடங்களும், அதிமுக-விற்கு 2 இடங்களும் கிடைக்கலாம்.
அதிமுக-வின் நெருக்கடி:
அதிமுக-வின் 2 இடங்களில் ஒன்று ஏற்கனவே அன்புமணிக்கு உறுதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
எஞ்சிய ஒரு இடத்திற்குத் தம்பிதுரை, ஜி.கே.வாசன் (தமாகா) மற்றும் அமித் ஷா மூலம் அழுத்தம் கொடுக்கும் டிடிவி தினகரன் என மும்முனைப் போட்டி நிலவுகிறது. சொந்தக் கட்சிக்கு ஒரு இடத்தையாவது ஒதுக்கவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமிக்கு உள்கட்சி நெருக்கடி அதிகரிக்கலாம்.
திமுக-வின் கணக்கு:
திமுக-வின் 4 இடங்களில் திருச்சி சிவாவிற்கு ஒன்று நிச்சயம்; மற்றொரு இடம் சபரீசன் அல்லது கட்சியின் முக்கிய நபருக்குச் செல்லலாம்.
மீதமுள்ள 2 இடங்களுக்காகப் புதிய கூட்டாளியான தேமுதிக (சுதீஷ்), காங்கிரஸ், விசிக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் மல்லுக்கட்டுகின்றன.
இந்த 6 இடங்களைச் சுமுகமாகப் பங்கிட்டால் மட்டுமே சட்டமன்றத் தேர்தல் கூட்டணி உறுதியாகும் என்பதால், இரு திராவிடக் கட்சிகளும் விழிபிதுங்கி நிற்கின்றன.
யார் யாருடைய பதவிக்காலம் முடிகிறது?
திமுக: திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ, டாக்டர் கனிமொழி சோமு.
அதிமுக: தம்பிதுரை, ஜி.கே.வாசன்.
English Summary
The Rajya Sabha Riddle DMK and AIADMKs Alliance Headache