சென்னை மெட்ரோ ரயிலில் முதல்வர் விஜய் ஆய்வு; உற்சாக வரவேற்பு கொடுத்த பொதுக்கள்..!
The public gave a warm welcome to Chief Minister Vijays inspection in the Chennai Metro train
தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் ஆட்சிக்கு வந்ததில் இருந்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு மேற்கொண்டார்.
அவர் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து நந்தனம் வரை பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டிருந்தபோது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களை பார்த்து முதலமைச்சர் விஜய்யும் கையசைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து, அங்கிருந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகத்துக்குச் சென்ற அவர், அங்குள்ள அரசு அதிகாரிகளுடன் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அதனைத்தொடர்ந்து, கிண்டி கத்திப்பாரா மெட்ரோ ரயில் நிலையம் வந்த அவர் பிரம்மாண்டமான 101 அடி உயரம் கொண்ட மெட்ரோ மேம்பால கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் போரூர் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து மெட்ரோ ரயிலில் பூந்தமல்லி வரை பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.
முதலமைச்சர் விஜய் பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு கீழே வருகை தந்து புறப்படுவார் என்று பொதுமக்கள் அவரை காண்பதற்காக காத்திருந்தனர். ஆனால், ஆளில்லாத ரயில் மூலம் போரூரில் இருந்து பூந்தமல்லி வரை வருகை தந்து ஆய்வு மேற்கொண்டு மீண்டும் அதே வழிதடத்தில் போரூர் திரும்பினார்.
English Summary
The public gave a warm welcome to Chief Minister Vijays inspection in the Chennai Metro train