விஜயை உலுக்கி எடுத்த கரூர் சம்பவம்! புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட இரண்டாம் கட்ட தலைவர்களை நீக்க திட்டமிடும் விஜய்? மாற்றம் பெரும் தவெக? - Seithipunal
Seithipunal


கரூர் சம்பவத்துக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் கட்சி பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது. கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பலர் தலைமறைவாகிவிட்டதால், பொதுச்செயலாளர் நடிகர் விஜய் தனிப்பட்ட முறையில் பிரச்சனையைச் சந்தித்து வருகிறார்.

கரூர் விவகாரத்தில் முக்கிய குற்றச்சாட்டுக்கு உள்ளான புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாக உள்ளார். அவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படவில்லை. சம்பவம் நடந்த நாளிலிருந்தே அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் நிலையில் உள்ளது.

சில தகவல்களின் படி, அவர் ஏற்காடு ரிசார்ட்டில் பதுங்கியுள்ளார் என்றும், பின்னர் சத்தியமங்கலம் காட்டிற்கு தப்பிச் சென்றார் என்றும், மற்றொரு வதந்தி படி அவர் வங்கக்கடலில் கப்பலில் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

இதில் மட்டும் இல்லாமல், நிர்மல் குமார், ராஜ்மோகன், ஜான் ஆரோக்கியசாமி, அருண் ஆகியோரும் தலைமறைவாக உள்ளனர். மேலும், கட்சியின் ஆதவ் அர்ஜுனா கலவரத்துக்கு தூண்டுகோலாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டதால், மதுரை உயர்நீதிமன்ற கிளை அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கட்சி உள்ளகத்தில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட இரண்டாம் கட்ட தலைவர்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை, விஜய்க்கு நெருக்கமான சிலரால் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தற்போது, தனக்கு விசுவாசமாக இருப்பவர்களை மட்டும் கட்சியில் வைத்துக்கொண்டு, மற்றவர்களை நீக்க வேண்டும் என்ற திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், நீண்ட காலமாக தன்னுடன் அரசியல் நட்புடன் இருப்பவர்களை மட்டுமே கட்சியில் முக்கிய பொறுப்புகளுக்கு கொண்டு வரலாம் என்ற எண்ணத்தில் உள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் கட்சி கடுமையான எதிர்ப்புகளையும், உள்ளக குழப்பங்களையும் சந்தித்து வருகிறது. இந்த நிலையை சமாளிக்க விஜய் எடுக்கும் முடிவுகள், கட்சியின் எதிர்கால திசையை நிர்ணயிக்கக்கூடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Karur incident that shook Vijay Is Vijay planning to remove second-tier leaders including Pussy Anand Is the change a big deal


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->