அமித்ஷாவை பார்த்த அடுத்த நாளே ஓபிஎஸ்க்கு ஓகே சொன்ன எடப்பாடி?சசிகலா–ஓபிஎஸ்–டிடிவி தினகரனை கூட்டணியில் இணைக்க புதிய யுக்தி?ஆனால், ஒரே ஒரு கண்டிஷன்!
The day after meeting Amit Shah Edappadi said OK to OPS A new strategy to bring Sasikala OPS TTV Dhinakaran into the alliance But there's only one condition
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடந்த சில வாரங்களாக கட்சிக்குள் நெருக்கடி அதிகரித்து வருகிறது. சீனியர் தலைவர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது அதிமுகக்கு பெரிய அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் நிர்வாகிகள் வெளியேறக்கூடும் என்கிற அச்சம் கட்சிக்குள் உருவாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில், அதிமுக அடிப்படை வாக்கு வங்கியை காப்பாற்றவும், பிளவுகளை சரிசெய்யவும், எடப்பாடி பழனிச்சாமி தனது அரசியல் யுக்தியில் மாற்றம் செய்யத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக பல ஆண்டுகளாக அதிமுகவிலிருந்து பிரிந்து செயல்பட்டு வரும் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர்களை மீண்டும் ஒருங்கிணைக்க விரும்புவதாக கூறப்படுகிறது.
ஆனால் இவர்கள் மூவரையும் நேரடியாக கட்சியில் சேர்க்க எடப்பாடி தயாராக இல்லை. பதவியோ உறுப்பினர் பொறுப்போ வழங்காமல், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மட்டும் கூட்டணியாக இணைந்துகொள்ளலாம் என்ற யோசனை அதிமுக தலைமையில் உருவாகி வருகிறது. இதனால் கட்சியின் கட்டுப்பாடு பாதிக்கப்படாமல், சிதறி கிடக்கும் வாக்குகளை ஒருங்கிணைக்கலாம் என்ற கணக்கில் இந்த திட்டம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதே நேரத்தில், செங்கோட்டையன் தனது 52 ஆண்டு அரசியல் அனுபவத்தைச் சுட்டிக்காட்டி பேசியதற்கு பதிலளித்த எடப்பாடி, தமக்குக் கூட 51 ஆண்டு அனுபவம் உள்ளது என்று கூறி தானும் சம அளவு அரசியல் வலிமை கொண்டவர் என்பதை வலியுறுத்தினார்.
சசிகலா–ஓபிஎஸ்–டிடிவி அணியை கூட்டணியில் கொள்ளும் இந்த புதிய சமரச யோசனையை பாஜகவும் ஆதரிக்கத் தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இது அதிமுகவிலிருந்து வெளியேற எண்ணும் நிர்வாகிகளுக்கு புதிய நம்பிக்கையைத் தருகிறது.
எடப்பாடியின் இந்த புதிய அரசியல் முயற்சி கட்சியின் பிளவுகளை ஆற்றுமா அல்லது புதிய மாற்றத்தை உருவாக்குமா என்பது தற்போது அரசியல் வட்டாரங்களில் முக்கிய கேள்வியாக உள்ளது.
English Summary
The day after meeting Amit Shah Edappadi said OK to OPS A new strategy to bring Sasikala OPS TTV Dhinakaran into the alliance But there's only one condition