புதிய அரசு பதவியேற்பு விழா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்; தலைமைச் செயலாளர், டிஜிபி, அதிகாரிகள் ஆலோசனை..!
The Chief Secretary the DGP and other officials hold consultations concerning security arrangements for the new governments swearing in ceremony
தமிழகத்தில் தவெக விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்கவுள்ளது. இந்நிலையில், தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறை செயலாளர் மணிவாசன், காவல் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிந்த நிலையில், விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதன்படி, இன்று தவெகவின் சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் விஜய் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சூழலில், ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
இன்னும் சில நாட்களில் தவெக தலைமையிலான புதிய அரசு அமையவுள்ள நிலையில், பதவியேற்பு விழா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
English Summary
The Chief Secretary the DGP and other officials hold consultations concerning security arrangements for the new governments swearing in ceremony