சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு; இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தமிழகம் வரவுள்ளார்...! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற தேர்தலுக்கும் இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால் தேர்தலுக்கான அணைத்து வேலைகளிலும் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழகம் வரவுள்ளதாக கூறப்படுகிறது.

. தமிழகம் வரும் தலைமை தேர்தல் ஆணையர் முதல் நாளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு 02 நாட்கள் தமிழகத்தில் முகாமிட்டு சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளனர்.

அதனபடி, முதல் நாளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளுடனும், மறுநாள் வருமான வரித்துறை, சி.ஆர்.பி.ஏஃப். உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தவுள்ளார். இருப்பினும், தலைமை தேர்தல் ஆணையர் குழு வருவதற்கு முன், துணை தேர்தல் ஆணையர்கள் தமிழ்நாடு வந்து ஆய்வு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Chief Election Commissioner of India is scheduled to visit Tamil Nadu to review the preparations for the assembly elections


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->