சாதனை வீராங்கனை மனிஷா ராமதாஸுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை...! - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு - Seithipunal
Seithipunal


ஜப்பானில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை மனிஷா ராமதாஸுக்கு, முதல்-அமைச்சர் விஜய் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

அவரது விளையாட்டுத் திறனையும் விடாமுயற்சியையும் அங்கீகரிக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது,"ஜப்பானில் நடைபெற்று வரும் ஐந்தாவது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

இந்த அணியில் இடம்பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த வீராங்கனை மனிஷா ராமதாஸுக்கும், பதக்கம் வென்ற இந்திய அணிக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.மனிஷா ராமதாஸ் படைத்துள்ள இந்தச் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் அவருக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

தொடர்ந்து மேற்கொண்ட கடின உழைப்பும், தளராத முயற்சியும் மனிஷா ராமதாஸை இந்தச் சாதனைக்குக் கொண்டு சென்றுள்ளன. அவரது வெற்றி, இளம் பாரா விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதேபோல், எதிர்வரும் போட்டிகளிலும் அவர் பல்வேறு வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் தொடர்ந்து பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு முதல்-அமைச்சர் விஜய் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

30 lakh incentive record breaking athlete Manisha Ramadoss Chief Minister Vijay dramatic announcement


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->