தளபதி டூ தலைவர்...! - நீலாங்கரையில் தவெக தலைவராக முதல் ஓட்டை பதிவு செய்த விஜய்....!
Thalapathy Vijay first vote Tvk leader in neelangarai
தமிழக அரசியல் அரங்கில் இன்று (வியாழக்கிழமை) ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் உற்சாகமாக நடைபெற்று வருகிறது.மேலும், 4,023 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள இந்த ஜனநாயக விழாவிற்காக, மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

காலை 7 மணியிலிருந்து வாக்குப்பதிவு தொடங்கி, மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து தங்கள் ஜனநாயகப் பொறுப்பை உறுதியாக நிறைவேற்றி வருகின்றனர்.
இந்த சூழலில், சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது கட்சி தொடங்கிய பின் முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்து கவனம் ஈர்த்தார்.
வாக்களித்த பின் கை விரலில் பதிக்கப்பட்ட மை அடையாளத்தை அவர் வெளிப்படுத்தினார்.வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வந்த விஜய், அங்கிருந்த முதியவர்களுடன் அன்பாக உரையாடி மனம் கவர்ந்தார்.
அவரை நேரில் காண ரசிகர்கள் பெருமளவில் திரண்ட நிலையில், அங்கு உற்சாக சூழல் நிலவியது. மேலும், கீழே தவறவிடப்பட்ட செல்போனை கவனித்த அவர், அதை எடுத்து உரியவரிடம் வழங்கிய மனிதநேய செயலும் பாராட்டைப் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Thalapathy Vijay first vote Tvk leader in neelangarai