சாக்கடைகளை சுத்தம் செய்ய வராங்களா? தயாநிதிக்கு தேஜஸ்வி கண்டனம்.!! - Seithipunal
Seithipunal


திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் இந்தி கற்றவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ குறித்து இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தேஜஸ்வி யாதவ், "கருணாநிதியின் திமுக சமூக நீதியில் நம்பிக்கை வைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர்கள் யாராவது உ.பி., பீகார் மக்களைப் பற்றி ஏதாவது கூறியிருந்தால் கண்டிக்கத்தக்கது. எங்களுக்கு இதில் உடன்பாடு இல்லை.

உத்திர பிரதேசம், பீகாரில் இருந்து வரும் தொழிலாளர்கள் நாடு முழுவதும் இருந்து அந்த கருத்துக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர். அப்படி ஏதேனும் பேசியிருந்தால் கண்டிக்கிறோம். அவர் குறிப்பிட்ட மக்கள் என்று கூறியிருந்தால்.எந்த சமூகத்தினர் சாக்கடைகளை சுத்தம் செய்கிறார்கள் என்றால் கூறினால் அது புத்திசாலித்தனமாக இருந்திருக்கும். குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் ஏன் சுத்தம் செய்ய வேண்டும்?

பீகார் மற்றும் உ.பி.யை சேர்ந்தவர்கள் சாக்கடைகளை சுத்தம் செய்ய வருவதாக கூறுவது கண்டிக்கத்தக்கது. அனைத்து கட்சி தலைவர்களும் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதிலிருந்து தவிர்க்க வேண்டும். இது ஒரு நாடு. பீகார் மக்களாகிய நாங்கள், மற்ற பகுதி மக்களை மதிக்கிறோம், அதையே எதிர்பார்க்கிறோம். இதுபோன்ற அறிக்கைகள் வெளியிடப்பட்டிருக்கக் கூடாது" என தயாநிதி மாறன் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tejaswi yadav condemns dmk Dayanidhi maran


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->