தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவர் யார்? டெல்லி மீட்டிங்கில் அடிபட்ட மூன்று பெயர்கள்! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றுவது வழக்கம். தற்போதைய காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பதவிக்கு வந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகப்போகிறது. காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் பதவி ஒரு வருடங்களுக்கு மேல் ஆயுர் காலம் முடிந்த நிலையில் புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. தற்போதைய தலைவர் கே.எஸ் அழகிய தலைவர் பதவியில் நீட்டிப்பதற்கான திட்டங்களை தீட்டி வருகிறார்.

இது பற்றி காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் கேள்வி எழுப்பதற்காகத்தான் கடந்த 15ஆம் தேதி நடந்த கூட்டத்தில் ரூபி மனோகரன் மற்றும் கே.எஸ் அழகிரி ஆட்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் கே.எஸ் அழகிரிக்கு எதிராக செல்வப் பெருந்தகை தலைமையில் தங்கபாலு, இளங்கோவன் மற்றும் பல நிர்வாகிகள் டெல்லிக்குச் சென்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விடம் மனு அளித்தனர்.

இந்த நிலையில் விரைவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்திரா காந்தி பிறந்த நாள் விழாவில் கார்த்திக் சிதம்பரம் வெளிப்படையாகவே தலைவர் பதவிக்கு விருப்பம் தெரிவித்துள்ளார். கார்த்திக் சிதம்பரம் முக்கியமான தலைவராக பார்க்கப்பட்டாலும் அவருக்கு பதவி வழங்க வாய்ப்பு மிகவும் குறைவு. அவருக்கு எதிராக பல மூத்த தலைவர்கள் தமிழக காங்கிரசில் குரல் கொடுத்து வருகிறார்கள் என்பதால் வாய்ப்பு குறைவாகவே கருதப்படுகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு தற்போதைய தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மாநிலக் கட்சி தலைவருக்கு இணையான அதிகாரம் இவருக்கு உள்ளது. இவருக்கு ஆளும் திமுகவின் சப்போர்ட், டெல்லி தலைமை இவரை நம்புவதால் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டு செல்வ பெருந்தகை காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

அதேபோன்று ஜோதி மணியும் தலைவர் ரேசில் இருக்கிறார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் இருப்பை தொடர்ந்து காட்டி வருகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தேசிய காங்கிரஸால் கவனிக்கப்பட்டவர். ராகுல் காந்தியின் நம்பிக்கை பெற்றுள்ளதால் பெண்கள் மத்தியில் இவருக்கு ஒரு அபிப்பிராயம் உள்ளது. தேசிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலும் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் இவரது பெயரை பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு மூன்று பெயர்கள் அடிபடுவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூடிய விரைவில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Congress Committee Chairman is likely to be changed soon


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->