''சங்கி குழுவுடன் தமிழகமே இணையப் போகிறது. மாணிக்கம் தாகூர் உட்கார்ந்து அழுது கொண்டிருக்க வேண்டியதுதான்.'' தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி..! - Seithipunal
Seithipunal


மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் டெல்லி இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் ‘பராசக்தி’ படக்குழுவினர் கலந்து கொண்டு, பிரதமர் மோடியை சந்தித்தது பேசினர். இது குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், ''சங்கி குழுவுடன் பராசக்தி குழு... ஆனால் ஜனநாயகன் முடக்கப்பட்டது'' என்று ‘எக்ஸ்’ தளத்தில் பக்கத்தில் பதிவிட்டு, விமர்சித்திருந்தார். 

மாணிக்கம் தாகூரின் இந்த விமர்சனம் குறித்து பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-

சங்கி குழுவுடன் தமிழகமே இணையப் போகிறது. மாணிக்கம் தாகூர் உட்கார்ந்து அழுது கொண்டிருக்க வேண்டியதுதான் என்று பதிலடி கொடுத்துள்ளார்.  இந்த 2026-இல் 'சங்கே முழங்கு' என்று சங்கிகள் முழங்கப் போகிறோம் என்றும், பராசக்தி குழுவினர் பிரதமரை சந்தித்தை, தமிழுக்கு தலைநகரில் மரியாதை கொடுக்கப்பட்டதாக ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், காங்கிரஸ் கட்சி, நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்தது. ஆனால், பிரதமர் மோடி தமிழ் கலைஞர்களை சந்தித்து மரியாதை செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். மேலும், பராசக்தி படம் தற்போது ரிலீசாகி இருப்பதால் அந்த படக்குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை விஜய் படம் ரிலீசாகி இருந்தால் விஜய்யை கூட அழைத்திருக்கலாம் என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழுக்காக போராடியவர்களை காங்கிரஸ் எவ்வாறு சுட்டுக்கொன்றது என்பதை பராசக்தி திரைப்படம் பதிவு செய்திருப்பது எனக்கு மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தணிக்கை வாரியம் தங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக பராசக்தி தயாரிப்பாளர் கூறியுள்ளார். எனவே, ஒரு படத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்துவிட்டு, மற்றொரு படத்தை தணிக்கை வாரியம் தடுத்து நிறுத்துவதாக கூறுவதை ஏற்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சனத்திற்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilisai Soundararajan says that the entire state of Tamil Nadu is going to join the Sanghi group


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->