கரீபியன் கடலில் வெனிசுலா கச்சா எண்ணெய் கப்பல் பறிமுதல்; அமெரிக்கா படைகள் தொடர் அட்டூழியம்..!
US forces have seized a Venezuelan crude oil tanker in the Caribbean Sea
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி அந்நாட்டின் மீது அமெரிக்கா கடந்த மாதம் தாக்குதல் நடத்தியது. அத்தோடு, மதுரோவை அமெரிக்கா கைது செய்துள்ள சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வெனிசுலாவில் செயல்பட்டு வரும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அத்துடன், வெனிசுலாவில் இருந்து பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களையும் அமெரிக்கா பறிமுதல் செய்து வருகிறது.

தற்போது, வெனிசுலாவுடன் தொடர்புடைய மேலும் ஒரு கச்சா எண்ணெய் கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது. இன்று கரீபியன் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பலை அமெரிக்க படைகள் பறிமுதல் செய்துள்ளது. குறித்த கச்சா எண்ணெய் கப்பல் வெனிசுலாவில் செயல்பட்டு வரும் கச்சா எண்ணெய் நிறுவனங்களுடன் தொடர்புடையதாகும். அத்துடன், இந்த கச்சா எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை விதித்துள்ளது.
இன்று பறிமுதல் செய்யப்பட்ட கப்பலின் மூலம் அமெரிக்கா பறிமுதல் செய்த வெனிசுலா மற்றும் அந்நாட்டில் செயல்பட்டு வரும் கச்சா எண்ணெய் நிறுவனங்களுடன் தொடர்புடைய கச்சா எண்ணெய் கப்பல்களின் எண்ணிக்கை 06 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
US forces have seized a Venezuelan crude oil tanker in the Caribbean Sea