07-வது மாநில நிதி ஆணையம்: ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் அமைக்க உத்தரவு..! - Seithipunal
Seithipunal


ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் 07-வது மாநில நிதி ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு நகர்ப்புர மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலைமை குறித்து ஆய்வு செய்து மாநில அரசு வழங்கிட வேண்டிய நிதிப்பகிர்வு குறித்து உரிய பரிந்துரைகளை இந்த ஆணையம் வழங்கிடும். 

அதன்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்ட வகையில், தமிழ்நாடு அரசு அமைத்துள்ள குறித்த ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமித்து ஆணையிட்டுள்ளது.

விபரம் பின்வருமாறு: 

01-தலைவர் : கே. அலாவுதீன், (ஓய்வுபெற்ற மாவட்ட ஆட்சியர்)

02-அலுவல் சாரா உறுப்பினர் : என்.தினேஷ்குமார், மேயர், திருப்பூர் மாநகராட்சி

03-உறுப்பினர் (அலுவல் வழி) : நகராட்சி நிர்வாக இயக்குநர்

04-உறுப்பினர் (அலுவல் வழி) : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர்

05-உறுப்பினர் (அலுவல் வழி) : பேரூராட்சிகளின் ஆணையர்

06-உறுப்பினர்-செயலர் : பிரத்திக் தாயள், அரசு துணைச் செயலாளர் (வரவு-செலவு) (முழு கூடுதல் பொறுப்பு), நிதித்துறை.

இந்த மாநில நிதி ஆணையம் ஊரக மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின், கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியக் குழுக்கள், மாவட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் ஆகியவற்றின் நிதி நிலையை ஆய்வு செய்து, பரிந்துரை செய்யும்.

அவை பின்வருமாறு: 

மாநில அரசு விதிக்கத்தக்க வரிகள், தீர்வைகள், சுங்கங்கள் மற்றும் கட்டணங்கள் ஆகியவற்றின் நிகர வருவாயினை மாநில அரசுக்கும் ஊரக மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இடையே பகிர்ந்து கொள்ளுதல், அத்தகைய வருவாயில் மேற்குறிப்பிட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கிடையே அவற்றிற்குரிய பங்குகளை முறையே பிரித்தளித்தல்.

ஊரக மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படக்கூடிய அல்லது அவைகளே தக்கவைத்துக் கொள்ளக்கூடிய வரிகள், தீர்வைகள், சுங்கங்கள் மற்றும் கட்டணங்கள் ஆகியவற்றைத் தீர்மானித்தல்.

மாநில அரசின் தொகுப்பு நிதியிலிருந்து மேற்குறிப்பிட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவி மானியங்கள், 2027 -ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் தேதியிலிருந்து தொடங்கும். மேலும், ஐந்தாண்டுகளுக்கு பொருந்தும் வகையில், 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தனது அறிக்கையை இந்த ஆணையம்,  தமிழ்நாடு அரசுக்கு அளித்திடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu government orders formation of 07th State Finance Commission headed by retired IAS officer


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->