அமைச்சர் காலணியை கழற்ற சொன்ன விவகாரத்தில் புதிய திருப்பம்! மாணவன் எடுத்த பரபரப்பு முடிவு!  - Seithipunal
Seithipunal


முதுமலை யானைகள் நலவாழ்வு முகாமிற்கு சென்ற தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு மாணவரை அழைத்து தன்னுடைய காலணிகளை அகற்ற சொன்னது இன்று காலை முதல் மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது . இந்த நிலையில் அந்த மாணவன் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நீலகிரி மாவட்டம் முதுமலையில் நடைபெற்று வரும் யானைகள் நலவாழ்வு முகாமில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் இன்று பார்வையிட்டார்.  அப்போது அங்கு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சென்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அங்கே நின்று கொண்டிருந்த மாணவரை அழைத்து தனது காலனிகளை அகற்ற சொன்னார். அந்த மாணவனும் கழட்டிவிட்டார். 

இதனை உடனடியாக பத்திரிகையாளர்கள் படம் பிடிக்க, வேகமாக வைரலாக, பேரனாக நினைத்து தான் அழைத்தனே தவிர வேறு நோக்கம் இல்லை என அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அமைச்சரின் காலணிகளை கழற்றி விட்ட மாணவன் கேத்தன் நீலகிரி மசினகுடி காவல் நிலையத்தில் அமைச்சர் சீனிவாசன் மீது புகார் அளித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாணவனுடன் பழங்குடி நலவாழ்வு சங்க நிர்வாகிகளும் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமைச்சர் மீது மாணவன் புகார் கொடுக்க வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Student complaint against minister


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->