முதல்வர் ஸ்டாலின் உருவப்படம் எரிப்பு.. வெகுண்டெழுந்த மாணவர்கள்.. பற்றி எரியும் போராட்ட தீ.! - Seithipunal
Seithipunal


தஞ்சை மைக்கேல் பற்றி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் லாவண்யா என்ற பிளஸ்டூ மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளி விடுதியின் அறையை வார்டன் சுத்தம் செய்ய வற்புறுத்தி ஆபாசமாக பேசியதால் விஷம் குடித்ததாக கூறப்பட்டது. 

ஆனால் சமூக வலைதளங்களில் அவரை மதம் மாற சொல்லி கட்டாயப்படுத்தியதாக சர்ச்சைகள் எழுந்தது. மாணவியின் தற்கொலையில் பல சந்தேகங்கள் எழுந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது. 

பின் தமிழக டிஜிபி சார்பில் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது லாவண்யாவின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று ஏபிவிபி மாணவர் அமைப்பினர் இரு நாட்களுக்கு முன்பு முதல்வர் வீட்டு முன் போராட்டம் நடத்தினர். 

இதனைத் தொடர்ந்து தற்போது, நேற்றிலிருந்து ஏவிபி வி மாணவர் அமைப்பினர் டெல்லி தமிழ்நாடு இல்லம் முன்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில், தற்போது அவர்கள் லாவண்யாவின் தற்கொலை வழக்கில் உண்மைகளை மூடி மறைக்க திமுக ஆட்சி முயற்சி செய்வதாக கூறி ஸ்டாலினின் உருவப்படத்தை எரித்ததாக கூறப்படுகிறது. இதனால் தற்போது பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin photo destroyed


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->