அடடே ஸ்டாலின் உண்மையாவே சனிக்கிழமை பிரதமராயிடுவார் போலயே?! மத்தியில் வைக்கப்படும் புதிய டிவிஸ்ட்!!  - Seithipunal
Seithipunal


மத்தியில் பாஜக, காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைக்க வேண்டும் என தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவரும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது முடிவில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்தால் அதனை ஏற்றுக் கொள்ளலாம் என தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் செய்தியாளர் ஐதராபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

Image result for chandrasekar rao seithipunal

அதில், "அந்தந்த மாநிலத்தின் கட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு கூட்டாட்சி முறை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஆதரவு தெரிவித்துள்ளார். அடுத்து கூட்டாட்சி முன்னணி தான் ஆட்சியை பிடிக்கும். ஒருவேளை எங்களுக்கு எம்பிகள் பலம் இல்லாமல் போகும் பட்சத்தில் காங்கிரசின் உதவியை நாடுவோம் எங்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்தால் ஏற்றுக் கொள்வோம். 

ஆனால், காங்கிரசுக்கு எந்த ஒரு அதிகாரத்தையும் நாங்கள் கொடுக்க மாட்டோம். எங்களது ஆட்சியின் டிரைவர் சீட்டில் மாநில கட்சிகள் தான் இருக்கும். எந்த கட்சி ஆதரவு கொடுத்தாலும் மாநில கட்சிகளில் உள்ள யாராவது ஒருவர் தான் பதவியில் இருப்பர். பாராளுமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திமுக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி உள்ள கட்சிகள் இடம் பெற வாய்ப்புகள் இருக்கின்றது.

காங்கிரஸ் கட்சி 100 இடங்களுக்குள் தான் வெற்றி பெறும் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆதரவு கொடுத்திருப்பது போல மத்தியில் எங்களை ஆதரிப்பதை தவிர காங்கிரஸிற்கு வேற வழி இல்லை கூட்டாட்சி முன்னணிக்கு இடதுசாரி கட்சிகளும் ஆதரவாக தான் இருக்கின்றன. எனவே, மத்தியில் கூட்டணி கூட்டாட்சி முன்னணி ஆட்சி மலர வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது" என அவர் தெரிவித்துள்ளார்

இதுபோல மாநில கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் பட்சத்தில் யார் பிரதமர் என்ற பிரச்சனை வரக்கூடும். இதுபோன்ற சமையத்தில் நிலையான ஆட்சி அமைப்பது சற்று கடினம் தான். 1996 ல் இப்படி சரியான பெரும்பான்மை கிடைக்காத ஆட்சியை அமைத்து 2 வருடத்தில் ஆட்சி கலைக்கப்படும். அல்லது பிரதமர் பதவியை பங்கிட்டு கொள்ளும் நிலை தான் ஏற்படும். அவ்வாறு நிலை ஏற்பட்டால், சமூக வலைத்தளங்களில் விமர்சித்ததை போன்று சனிக்கிழமை பிரதமராக ஸ்டாலின் வருவதற்கும் வாய்ப்புள்ளது. 

English Summary

stalin may pm on saturday


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal