பொன்முடியின் அமைச்சர் பதவி பறிக்க தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ள ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


தமிழக அமைச்சரவையில் பல மாற்றங்கள் வரக்கூடும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் தற்பொழுது வரை எந்த ஒரு மாற்றத்திற்கான அறிகுறியும் தென்படவில்லை. ஆனால் முதல்வர் ஸ்டாலின் திமுக பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துறைமுருகன் மற்றும் இதர மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. பொதுவெளியில் சர்ச்சைக்குரிய பேச்சுக்களாலும் செயலாலும் சிக்கிவரும் அமைச்சர்களை ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் கண்டித்துள்ளதாக தெரிய வருகிறது.

ஆனால் அதனையும் மீறி ஒரு சில அமைச்சர்கள் பேசி வருகின்றனர். அதேபோன்று கருப்பு பட்டியலில் உள்ள நிறுவனங்களிடமிருந்து பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதல் செய்த காரணத்திற்காக அமைச்சர் சக்கரபாணியின் உணவு பொருள் வாணிப கழக தலைவர் பதவி பறிக்கப்பட்டது. மற்றொரு அமைச்சரான பொன்முடி திமுக பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் தன்னுடைய கஷ்டத்தை சொல்லி பேசிக் கொண்டிருக்கும் பொழுது வாய்விட்டு சிரித்தார். அதேபோன்று இலவச பேருந்துகளில் செல்லும் பெண்களைப் பார்த்து ஓசி என்று பேசி சர்ச்சையில் சிக்கினார். இந்த விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. 

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை எடுத்த திருவெண்ணெய்நல்லூர் அருகே சித்தலிங்கமாடும் கிராமத்து எல்லை பிரிப்பு பிரச்சனை போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்தபோது போராட்டக் குழுவில் ஒருவரை பார்த்து "போடா மயி..." என்று கோபமாக திட்டிய வீடியோ வைரலானது. தன்னுடைய வார்த்தைகளை மீறி அமைச்சர் பொன்முடி பொதுவெளியில் இது போன்ற நடந்து கொண்டதால் ஸ்டாலின் கடும் கோபத்தில் இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தென் தமிழகத்தில் முக்கிய மாவட்டமான நெல்லைக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லை என்ற குறைபாடு உள்ளதால் தற்போது சபாநாயகராக இருக்கும் அப்பாவுவை அமைச்சராக மாற்றி விடலாம் என துரைமுருகன் உடனான ஆலோசனையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் பொன்முடிக்கு சட்டசபையில் எதிர்க்கட்சிகளை கையாள்வதில் அனுபவம் உள்ளதால் அவருக்கு சபாநாயகர் பதவி வழங்கி விடலாம் எனவும் ஸ்டாலின் யோசனை தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கூடிய விரைவில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவெளியில் அநாகரீகமான வார்த்தைகளில் பேசி சர்ச்சையில் சிக்கும் அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவை தலைவரானால் அங்கேயும் இது போன்ற வார்த்தைகளில் பேசினால் ஸ்டாலினுக்கு அது பெரிய தலைவலியை ஏற்படுத்தி விடும் என்பதை யோசனை செய்ய மறந்து விட்டாரோ என அரசியல் விமர்சனகள் கருத்து தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Stalin discuss take away Ponmudi ministerial position


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->