இலங்கையில் தப்பி ஓடும் அமைச்சர்கள் தலைமறைவு., மக்களின் போராட்டம் எதிரொலி.! - Seithipunal
Seithipunal


கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் இலங்கை நாடு, தற்போது அதிலிருந்து மீளமுடியாமல் மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள அனைத்துப் பொருள்களின் விலைகளும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

ஒருபக்கம் போராட்டம், ஒருபக்கமும் அமைச்சரவை மாற்றம், அரசியல் திருப்பங்கள் என்று இலங்கை நாடு பரபரப்பாகவும், பதட்டமான ஒரு நிலையிலும் இருந்து வருகிறது. பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். நிலைமையை சமாளிக்க முடியாமல் பதவி ஏற்றுள்ள புதிய அமைச்சர்களும் ராஜனமா ராஜினாமா செய்து வருகின்றனர்.

இந்த கடும் நெருக்கடி நிலையை சரிசெய்ய முடியாமல் இலங்கை பாராளுமன்றம் தவித்து வருகிறது, இலங்கை நாட்டின் அதிபர், பிரதமர், அமைச்சர்கள் வீடுகளை முற்றுகையிட்டு அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தா நிலையில், போராடும் பொதுமக்கள் பிடியில் சிக்கினால், தன்னை தாக்கி விடுவார்களோ என பயந்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். 

தலைதெறிக்க தப்பி ஓடி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பில் உள்ள அவருக்கு சொந்தமான ஒரு ஓட்டலில் மறைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற அமைச்சர்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டல்களில் தங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sri Lankan ministers escaped


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->