பற்றி எரிகிறதா இலங்கை? அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி செய்திகள்.! - Seithipunal
Seithipunal


வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது. குடும்ப ஆட்சிக்கு பெயர்போன ராஜபக்சே குடும்பத்தினர் தவறான முடிவுகளே இதற்க்கு காரணம் என்று, இலங்கை மக்கள் சுயமாக தெருவில் இரங்கி போராட ஆரம்பித்துவிட்டனர்.

ஒரு மாதமாக அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி தெருமுனை போராட்டங்கள் நடந்து வந்தது.

இந்நிலையில், இன்று மதியம் தலைநகர் கொழும்புவில் மகிந்த ராஜபக்சே வீட்டின் முன்பு, மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அவர் பதவி விலக வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுக்கு எதிராக மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்களும் அங்கு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றிவே,  போராட்டக்காரர்களை மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் தாக்கினர். மேலும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவையும் தாக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது ஏற்பட்ட கலவரத்தில் ஆளுங்கட்சி எம்.பி. அமரகீர்த்தி அத்துகொரலா உயிரிழந்துள்ளார். மேலும் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிப்பட்டனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கலவரம் முற்றிய நிலையில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இலங்கை அமைச்சரவையும் கலைக்கப்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri Lanka Crisis Protests


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->