சபாநாயகர் இருக்கை ஒரு கட்சிக்கானது அல்ல...! - மாணிக்கம் தாகூர் விடுத்துள்ள ஜனநாயக அறைகூவல்...! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் துணை கொறடா 'மாணிக்கம் தாகூர்' தனது சமூக வலைதளப் பக்கத்தில் விடுத்துள்ள அதிரடி அறிக்கையில் குறிப்பிட்டதாவது,"மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவைப் பதவியிலிருந்து நீக்கக் கோரி பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 118-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்த கருத்துடன் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அந்தப் புகாரில், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் கருத்துச் சுதந்திரம் திட்டமிட்டு நசுக்கப்படுவது, பெண் உறுப்பினர்கள் மீது அடிப்படை ஆதாரமற்ற அவதூறுகளைச் சுமத்துவது மற்றும் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை எழுப்பியதற்காக எதிர்க்கட்சியினரை ஒட்டுமொத்தமாகச் சபையிலிருந்து இடைநீக்கம் செய்வது போன்ற ஜனநாயகத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

மேலும், முன்னாள் பிரதமர்கள் குறித்து அவமதிப்பான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோது சபாநாயகர் மௌனம் காத்தது அவரது நடுநிலைத் தன்மை மீதான நம்பகத்தன்மையைச் சிதைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இவை வெறும் அரசியல் மோதல்கள் மட்டுமல்ல, நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் மாண்பையும் கேள்விக்குறியாக்கும் தீவிரமான விவகாரங்கள் எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஆளுங்கட்சிக்கு எண்ணிக்கை பலம் இருந்தாலும், சபாநாயகரின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கும் எதிர்க்கட்சிகளின் உரிமை என்பது நமது ஜனநாயக மரபின் மகத்தான அடையாளம் என்று வலியுறுத்தியுள்ளார்.

வரும் மார்ச் 9-ஆம் தேதி நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையும் எனக் குறிப்பிட்டுள்ள மாணிக்கம் தாகூர், சபாநாயகர் இருக்கை என்பது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கானது அல்ல, அது ஒட்டுமொத்த சபைக்கும் பொதுவானது என்பதை நிரூபிக்க வேண்டிய தருணம் இதுவெனக் தெரிவித்துள்ளார்.

எனவே, கட்சிப் பாகுபாடின்றி அனைத்து உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தின் நடுநிலைமையை காக்க இந்த விவாதத்திற்குத் துணை நிற்க வேண்டும் என அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Speakers seat not one party Manickam Thakur democratic call


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->