வீட்டுலயே இருங்க! பேய் மழை... சைரன் ஒலி எழுப்பி எச்சரிக்கை! கேரளா மாநிலத்திற்கு ரெட் அலெர்ட்!
Southwest Monsoon Kerala red alert heavy rain
தென்மேற்கு பருவமழை பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாத தொடக்கத்தில் கேரளாவில் தொடங்கி, தமிழ்நாட்டின் சில பகுதிகளையும் பாதிக்கிறது.
இந்த மழை பருவம் ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும். குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைத்தொடருக்கு அருகிலுள்ள குமரி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இதனால் பெருமளவு மழை பெய்யும்.
இந்த ஆண்டுக்கான பருவமழை, முந்தைய அறிவிப்பின்படி மே 27-ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது பருவமழை அதன் முன்னதாகவே தொடங்கி விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கான அறிகுறிகளாக ஏற்கனவே பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் மே 23 வரை பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்க்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய வடக்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே தங்கவும், மழைநீர் தேங்கும் பகுதிகளை தவிர்க்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மிக கனமழையை முன்னிட்டு "கேடய" அமைப்பின் மூலம் எச்சரிக்கையுடன் சைரன் ஒலி எழுப்பப்பட்டுள்ளது.
வயநாடு சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. மீட்பு படைகள் தயார் நிலையில் இருப்பதுடன், மாவட்ட நிர்வாகத்தின் பாதுகாப்பு உத்தரவுகளை பொதுமக்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
English Summary
Southwest Monsoon Kerala red alert heavy rain