போராடி தோற்ற கமல்., கமல் பற்றி ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ள பதிவு.! படு வைரல்.!  - Seithipunal
Seithipunal


 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 159 தொகுதிகளை வென்று திமுக ஆட்சி அமைக்கிறது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதில் கோவை தெற்கு தொகுதியும் ஒன்று. பல ஆண்டுகளாக களப்பணியாற்றி வந்த வானதி ஸ்ரீனிவாசன் பாஜக அதிமுக கூட்டணி சார்பாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். 

இந்த தொகுதியில் நட்சத்திர வேட்பாளரான கமலஹாசன் போட்டியிட்டது, மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியது. வாக்கு எண்ணிக்கை நாளில் கூட கமலஹாசன் இறுதி நேரம் வரை முன்னிலையில் இருந்தார். ஆனால், திடீரென்று வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியானது. 

இந்த நிலையில், கமலஹாசன் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகை சுருதிஹாசன், "என் தந்தையை நினைத்து நான் எப்பொழுதும் பெருமைப்படுகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shruthihassan story about kamalhassan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal