#BREAKING_NEWS: பள்ளிகள் திறப்பு?! அறிவிக்கப்போகும் தமிழக முதல்வர்! அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட புதிய தகவல்!  - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் வழிகாட்டுல் படி, அக்டோபர் 1 முதல் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சந்தேகம் கேட்க மட்டும் பள்ளிக்கு பெற்றோர் அனுமதியுடன் வரலாம் என்று அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. ஆனால், சில நாட்களில் இந்த அறிவிப்பை உடனடியாக ரத்து செய்தது.

இதற்கிடையே, தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திவருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடன் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக்கல்வி ஆணையர் வெங்கடேஷ், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குனர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.

இந்நிலையில், பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை என்று ஆலோசனை கூட்டம் முடிந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளிகள் திறப்பது குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகே முடிவு செய்யப்படும் என்றும், பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதலமைச்சர் தான் அறிவிப்பார் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

senkottaiyan say about school opening


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->