அதிமுகவுடன் கூட்டணி! பச்சைக்கொடி காட்டுகிறாரா சீமான்! பரபரக்கும் அரசியல் களம்! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ஒவ்வொரு கட்சியின் தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ள கருத்து, ஆச்சர்யத்தை உண்டாக்கியிருக்கிறது. 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டணி முறிவு குறித்து ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்ட நிலையில், அதனை அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து அறிவித்தார். 

இந்த கூட்டணி முறிவு குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், "பாஜக உடன் கூட்டணி இல்லை என்கிற அதிமுகவின் முடிவு வரவேற்கத்தக்கது. இதுபோல துணிந்து முடிவெடுக்கும் கட்சி அதிமுக மட்டும் தான். அண்ணா பற்றி பேசியதால், கூட்டணி இல்லை என அதிமுக சொன்னது போல, காங்கிரஸ் வேண்டாம் என்று திமுக சொல்லுமா? என திமுகவை விமர்சித்து பேசியிருக்கிறார். 

இந்த பேச்சானது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சி இதுவரை கூட்டணி அமைத்து போட்டியிடாத நிலையில், அதிமுகவின் முடிவை வரவேற்று, திமுகவை விமர்சித்து இருப்பதன் மூலம் அதிமுக கூட்டணிக்கு பச்சைக்கொடி காட்டுகிறாரா என்ற சந்தேகம் அரசியல் விமர்சகர்கள் இடையே எழுந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman talk about admk bjp alliance broken


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->