ரகசிய தகவல் உண்மையானது! ரூ. 3 1/2 கோடி ஹவாலா பணத்தை கைப்பற்றிய காவலர்கள்!
secret information is true police seized Rs 3 and half crore hawala money
விளக்குத்தூண் காவலர்களுக்கு, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வாகன நிறுத்தத்தில் ஒரு கும்பல் சட்டவிரோதமாக ஹவாலா பணத்தை காரில் வைத்து கை மாற்றுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில்,அங்கு விரைந்து சென்ற காவல் இன்ஸ்பெக்டர் சங்கர்கண்ணன் தலைமையிலான காவலர்கள் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அச்சமயம், ஹவாலா பணம் வைத்திருந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். அதுமட்டுமின்றி,அவர்களிடமிருந்து ரூ.3¾ கோடி ஹவாலா பணம் கைப்பற்றப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பாபுராவ் உள்ளிட்ட 5 பேரை விளக்குத்தூண் காவலர்கள் உடனடியாக கைது செய்தனர். மேலும், காவலர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள், கைதானவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
secret information is true police seized Rs 3 and half crore hawala money