அடுத்தடுத்து வெளியாகும் தடை.!! ரவீந்திரநாத் எம்.பி பதவியும் தப்பியது.!! உச்ச நீதிமன்றம் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த 2019 ஆம் ஆண்டு போட்டியிட்ட ரவீந்திரநாத் தனது வேட்பு மனு தாக்கல் செய்த போது தன் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியதாகவும், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாகவும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வேப்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி ஏற்றுக்கொண்டது தவறு என கூறி ரவீந்திரநாத்தின் வெற்றியை செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மேலும் ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கியும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை நிறுத்தி வைத்தது. இந்த நிலையில் ஓ.பி ரவீந்திரநாத் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சென்னை உயர்நீதிமன்றம் ஓ.பி ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும், 2 வாரத்திற்குள் மனுதாரராக இருக்கக்கூடிய ஓ.பி ரவீந்திரநாத் மற்றும் எதிர் மனுதாரராக இருக்கக்கூடிய மிலானி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் மாதம் 4ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீ உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மூலம் ஓ.பி ரவீந்திரநாத் நாடாளுமன்ற உறுப்பினராக தொடரும் சூழல் ஏற்பட்டுள்ளது. சற்று முன்னர் அவதூறு தொடர்பான வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைப்பது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தற்பொழுது தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் ஓபிஎஸ் மகனமான ரவீந்திரநாத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி மக்களவை சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் ரவீந்திரநாத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் மேல்முறையீடு செய்து கொள்ள கால அவகாசம் வழங்கியதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC stayed sentence given to Ravindranath by ChennaiHC


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->