கிருஸ்துவ, இஸ்லாமிய மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது.! தனித்தொகுதியில் போட்டியிடத்தடை.! மத்திய அரசு அதிரடி.! - Seithipunal
Seithipunal


இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய பட்டியல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு சலுகைகள் கிடையாது என்று, மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல் தெரிவித்துள்ளார்.

பட்டியல் இனத்தவர்கள் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொள்ளும் போது, இவர்கள் இந்து மதத்தின் பட்டியல் இனத்தவர் இட ஒதுக்கீட்டுக்கான சலுகைகளை கோரமுடியாது என்று, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.

பட்டியல் இனத்தவர்கள் கிறிஸ்தவம், இஸ்லாம் மதம் மாறியவர்கள் இது இட ஒதுக்கீடு சலுகைகளை கோர முடியாதா? என பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்துள்ளார். அவரின் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்லாம் அல்லது கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் அவர்களால் இட ஒதுக்கீடு சலுகைகளை கோரமுடியாது. அவர்கள் பாராளுமன்றம் அல்லது சட்டமன்ற தேர்தலில் பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட தனித்தொகுதியில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் போட்டியிடவும் முடியாது.

அதே சமயத்தில் இந்து மதத்தை சேர்ந்த பட்டியல் இனத்தவர்கள் சீக்கிரம் அல்லது பௌத்த மதத்திற்கு மாறினால் இட ஒதுக்கீடு பலன்களை பெறவும், தனித்தொகுதியில் தேர்தலை சந்திக்கவும் தகுதி பெற்றவர்களாக உள்ளனர்.

அரசியலமைப்பின் உத்தரவுப்படி, இந்து, சீக்கிய, பௌத்த மதத்தில் இருந்து வேறுபட்ட ஒரு மதத்தை சார்ந்த எந்த ஒரு நபரும் பட்டியல் சாதியை சேர்ந்தவராக கருதப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில், "ஒரு நபர் இந்துவாக இருந்து இஸ்லாம் அல்லது கிறிஸ்தவராக மாறிய உடன், இந்து மதத்தின் காரணமாக எழும் சமூக மற்றும் பொருளாதார குறைபாடுகள் நின்றுவிடுகின்றன. எனவே அவருக்கு இனி பாதுகாப்பு அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதன் காரணமாக அவர்கள் பட்டியல் சாதியை சேர்ந்தவர் அல்ல என்று கருதப் படுவார்.'' என்று அந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது." என்று சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SC Reservation ISSUE


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->