பொன்முடி மேல் முறையீட்டு வழக்கு... DVAC-க்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து மதிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

ஏற்கனவே இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்த போது முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனை காரணமாக ஆஜர் ஆகுவதிலிருந்து விலக்கு அளிப்பதாகவும், தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கவில்லை எனவும் அறிவித்திருந்தது.

வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை இடைக்காலமாக நிறுத்தி வைக்க மீண்டும் உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. 

அதேவேளையில் முதலமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 4ம் தேதிக்குள் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கின் விசாரணையையும் அன்றைய தினமே ஒத்தி வைத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sc ordered davc response to ponmudi appeal case


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->